அண்ணா சாலையில் பறிமுதல் செய்யப்பட்டது ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்

0
115

போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில், முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் சென்னை அண்ணா சாலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. 

சென்னை அண்ணா சாலை பகுதியில் ஆயிரம்விளக்கு போலீஸார் இன்று(புதன்கிழமை) அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்துகொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், வாகனத்தில் இருந்த ஒரு பையில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் உரிய ஆவணங்களின்றி நகையை தனியார் நகைக் கடை ஊழியர்கள் எடுத்துவந்துள்ளது தெரியவந்தது. 

பின்னர், போலீஸார் பறிமுதல் செய்த நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்து நகைகளை திரும்பப் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here