விஜய் நடிப்பில் அட்லிஇயக்கத்தில் உருவாகியுள்ள3வது படம் பிகில்.

இதன் பாடல் வெளியீட்டு விழா 19 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.  இந்த விழாவில் நடிகர் விஜய், படத்தில் பணியாற்றியவர்கள் விவரம், வெறித்தனம் பாடல் பதிவு செய்யப்பட்ட நிகழ்வு, சுபஸ்ரீ, பேனர் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார். அவரது பேச்சு குறித்த விவாதங்கள் அடுத்த நாளே சூடு பிடிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று(ஞாயிற்றுக்கிழமை)  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து நடிகர் சாந்தனு
பாக்யராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அண்ணா பேசுனா ஒவ்வொருவார்த்தையும். ரசிகர்களையும், படத்தில் வேலை செய்த ஒவ்வொரு கலைஞர்களுக்கும் மறக்காம நன்றி சொல்றதும். அவர் தளபதியா இருக்க இதுதான் காரணம். இப்ப கொஞ்ச நாளா குசும்பும் சேர்ந்து வருது. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நேசிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here