அண்டார்டிகாவில் அதிகரிக்கும் வெப்பம்: உருகும் பனிப்பாறைகள்

A new record set so soon after the previous record of 17.5C in March 2015 is a sign warming in Antarctica is happening much faster than global average

0
226

அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, 18.3 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், கடல் நீர் மட்டம் விரைவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் உள்ள ‘எஸ்பெரான்சா’ என்ற ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘அண்டார்டிகாவில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம்,17.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. இதுவே, அன்டார்டிகாவில் பதிவான அதிக வெப்பநிலையாக இருந்தது.

இந்நிலையில், உலகை அச்சுறுத்தும் வகையில், கடந்த 6ம் தேதி, இதன் வடக்குப் பகுதி முனையில், வெப்ப நிலை 18.3 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில், உலக வானிலை ஆய்வு நிறுவன செய்தி தொடர்பாளர் கிளர் நல்லிஸ் கூறியதாவது:அண்டார்டிகாவில் வெயில் காலத்தில் கூட, இந்த அளவு வெப்பம் பதிவாகாது.

கடந்த, 50ஆண்டுகளில், அன்டார்டிகாவில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால், அண்டார்டிகாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள, 87சதவீத பனிப்பாறைகள் உருகியுள்ளன.அதிக அளவில் பனிப்பாறைகள் உருக, புவி வெப்பமயமாதல் தான் காரணமாக உள்ளது. பனிப்பாறை உருகுவதால், நுாறு ஆண்டில் கடல் மட்டம் 10 அடி உயரும் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அண்டார்டிக் பனிப் படுகையில்,1979ல் இருந்து, 2017 வரையிலான ஆண்டுகளில் பனி உருகுவது ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தளவு கூடுதலாக பனி உருகினால், கடல் மட்டம் விரைவில் உயரும். கடற்கரை நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here