அணு ஆயுத சோதனைத் தளத்தை ’அழித்தது’ வட கொரியா

0
259

அண்டை நாடுகளுடனான பதற்றத்தை குறைக்க தனது அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வட கொரியா வெடிக்கச் செய்ததாக தெரிய வருகிறது.

பங்யீ ரீ’ (Punggye-ri) அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள செய்தியாளர்கள் தாங்கள் மிகப்பெரிய வெடி சம்பவத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

408

தென் கொரியா மற்றும் அமரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் தங்களது அணு ஆயுத சோதனைத் தளத்தை அழிப்பதற்கு வட கொரியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன் வந்தது.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சோதனையில் அந்த தளம் சேதம் அடைந்ததாகவும், பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Screen Shot 2018-05-24 at 5.58.35 PM

சுரங்கங்களை வெடிப்பதை பார்க்கச் சென்ற செய்தியாளர்களில் ஒருவர் கூறுகையில், நாங்கள் மலைகளின் மீது ஏறிச் சென்றோம்; சுரங்கங்கள் வெடித்ததை 500மீட்டர் தொலைவில் இருந்து பார்த்தோம் என தெரிவித்தார்.

“மூன்று, இரண்டு, ஒன்று என்று கூறினார்கள். பயங்கரமாக வெடித்தது. எங்களால் அதை உணர முடிந்தது. புழுதி எங்கள் அருகில் வந்தது, மிக பயங்கரமான சத்தம் கேட்டது” என்றார் அந்த செய்தியாளர்.

Courtesy : BBC Tamil

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்