அணுக்கதிர் வீச்சால் எங்கேயாவது திமிங்கலங்கள் சாகுமா?

0
613

தூத்துக்குடி ஆலந்தலை கடற்கரையில் 80-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அதில் 40க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துள்ளன. ஏன் திமிங்கலங்கள் இப்படி அணிஅணியாக கரை ஒதுங்குகின்றன? அவற்றின் இறப்புக்குக் காரணம் என்ன? அருகிலேயே உள்ள கூடங்குளம் அணு உலையில் இருந்து வந்த அணு சக்தியின் ஆற்றல், மற்றும் அதனையடுத்து வந்த பெரும் சத்தம் ஆகியவை சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இதுகுறித்த கேள்விகள் எழுகின்றன. ஆனால், “திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதற்கு அணுக்கதிரின் வீச்சுக்கும் சம்பந்தம் இல்லை”, என மத்திய கடல்சார் ஆய்வு மையம், முன்னாள் முதன்மை அறிவியலாளர், நம்மாழ்வார் கூறுகிறார்.

திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதற்கு இவர் 5 முக்கிய காரணங்களையும் சொல்கிறார்.

1. பருவநிலைமாற்றம், நீரின் ஓட்டத்தின் மாற்றம் ஆகியவை இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. பூமத்திய பகுதியில் ஏறபட்ட அதிர்வு, இந்தோனேஷியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட அதிர்ச்சி ஆகியவை பெருந்திரளாக திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதற்கு காரணமாக உள்ளது. கடலில் உள்ள பெரிய உயிரினமான திமிங்கலங்களின் மீது இந்த அதிர்ச்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

2. பருவநிலை மாற்றம் எப்பொழுதெல்லாம் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் திமிங்கலங்கள் இடம்பெயரும். திமிங்கலங்கள் எப்பொழுதும் ஆழத்தில், 500 முதல் 1000 மீட்டர் வரையுள்ள ஆழத்தில்தான் உயிர் வாழும். இரை தேடவும் இடம் பெயரும். பெரும்பாலும், திமிங்கலங்கள் மீன்களைத்தான் உண்டு வாழும். வட திசையில் இருந்து தென் திசையை நோக்கி திமிங்கலங்கள் இடம்பெயரும். மெல்ல மெல்ல இடம்பெயர்ந்து கடலின் மேலோட்டத்தில் 5 மீட்டருக்குள் வந்துவிடும் பொழுது அவற்றுக்கு திசையை ஒருங்கிணைக்கும் சக்தி போய்விடும். அவை எங்கு செல்கின்றன என்பது அவற்றுக்கே தெரியாது. மூளை செயல்படுவதும் கரைக்கு வந்தவுடன் குறைந்துவிடும்.

3. இடம்பெயரும் போது திமிங்கலங்களுக்கு வழி தெரிவதில்லை. அவை தடுமாறி விடுகின்றன. ஒரு திமிங்கலம் வழி தவறிவிடும் போது அதை பின் தொடரும் மற்ற திமிங்கலங்களும் வழி தவறுகின்றன. அதனால்தான் அவை இறக்கின்றன. திமிங்கலங்களை காப்பாற்றுவதற்கென பிரத்யேக மையங்கள் அமெரிக்காவில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படியொன்றும் இல்லை.

4. சில திமிங்கலங்களுக்கு வயதாகி விடும். அப்பொழுது அவற்றுக்கு சில நோய்கள் வருவதனாலும் அவைகள் இறந்து விடுகின்றன.

5. மனிதர்களால் உண்டாக்கப்பட்ட மாசுவினாலும் திமிங்கலங்கள் உயிரிழக்கின்றன. எல்லாக் கழிவுகளும் கடற்கரைகளில் கலப்பதே இதற்கு காரணம். அணுக்கதிர் வீச்சு இதற்கு காரணமே இல்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்