அட்லி இயக்கத்தில் அவரா? – ஆச்சரியப்படும் சினிமா உலகம்

0
340

நாலைந்து பழைய படங்களை தழுவி படம் எடுக்கிறவர் என்று அட்லியை விமர்சகர்கள் இட்லியாக பிசைந்தாலும் கமர்ஷியல் வெற்றி காரணமாக மோஸ்ட் வான்டட் இயக்குனராக திகழ்கிறார் அட்லி. அவரது அடுத்தப்படம் குறித்து கலர் கலராக தகவல்கள்.

அடுத்தப் படத்தில் மூன்று முன்னணி நடிகர்களை இயக்குவதாக முதலில் தகவல் சொன்னார்கள். இப்போது பாகுபலி நாயகன் பிரபாஸை அவர் இயக்குவதாக ஒரு வதந்தி உலவுகிறது.

மெர்சல் படத்துக்கு முன்பே அட்லி பிரபாஸை சந்தித்து ஒன் லைன் சொன்னதாகவும், விஜயயேந்திர பிரசாத் அந்த ஒன் லைனை ஸ்கிரிப்டாக்கி தரவிருப்பதாகவும், பிரபாஸ் நடிப்பார் எனவும் ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பிரபாஸ் இப்போது சாஹோ படத்தில் நடித்துள்ளார். தனது அடுத்தப் படம் குறித்து அவர் அறிவிக்கையில் அட்லி விஷயம் உண்மையா பொய்யா என்பது தெரிந்துவிடும்.

இதையும் படியுங்கள்: Why the National Disaster Response failed during Cyclone Ockhi?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்