அடையாறு ஆற்றங்கரையில் பங்களா கட்டும் காஸா கிராண்ட்: முன்னெச்சரிக்கை ரிப்போர்ட்

0
244

(ஆகஸ்ட் 2, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

???????????????????????????????

???????????????????????????????

இந்த முழுப்பக்க விளம்பரங்களை காஸா கிராண்ட் கொடுத்ததை சென்னைவாசிகள் பார்த்திருப்பார்கள்; புதிதாகத் திறக்கப்படவுள்ள சென்னை ஏர்போர்ட்-சின்னமலை மெட்ரோ ரயில் பாதையில் ஏர்போர்ட்டில் ஏறி சின்னமலை ஸ்டேஷனில் இறங்கி மவுண்ட் ரோடு மாண்டே கார்லோ மாடி வீட்டுக்கு நடந்துபோய் விடலாம்; சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து பொடிநடையாக இங்கு வந்துவிடலாம் என்றெல்லாம் வகை வகையாக வசனங்கள்; குறைந்தபட்ச விலை ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய்; 100 வீடுகள் கட்டப்படுகின்றன.

அண்ணா சாலையில் காஸா கிராண்ட் கொடி நட்டு வேலையைத் தொடங்கிவிட்டார்கள்; சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) அனுமதியில்லாமல் இதெல்லாம் நடக்க முடியாது; விளம்பரத்தில் ஒரு மருந்துக்குக்கூட எங்கேயும் வெள்ளத்தடுப்புக்கான ஏற்பாடுகள் இந்தக் கட்டுமானத்தில் செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் கிடையாது; பல வெள்ளங்களைக் கண்ட இடத்துக்கு அருகில் இந்தக் கட்டுமானம் உருவாகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் வெள்ளத்தின் நினைவுகளிலிருந்து சென்னை நகரம் முழுமையாக மீளாத நிலையில் இந்தக் கட்டுமானம் தொடங்கியிருக்கிறது; சென்னையின் பெருகிவரும் வீடுகளுக்கான தேவைகளை யாரும் மறுக்க முடியாது; அதே சமயம் நுகர்வோருக்கான முழுமையான தகவல்களை வெளியிடுவதும் கட்டுமான நிறுவனங்களின் பொறுப்பாக இருக்கிறது. இந்த அடிப்படையில் இப்போது டாட் காம் காஸா கிராண்டைத் தொடர்பு கொண்டு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை இந்தக் கட்டுமானம் எப்படித் திட்டமிட்டுள்ளது என்று கேட்டது; இது முக்கியமான கேள்வி என்பதை ஒப்புக்கொண்ட நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்கள் இதுபற்றி நிர்வாகம்தான் பதிலளிக்கும் என்று கூறினார்கள். காஸா கிராண்ட் நிர்வாகத்துக்கும் இதைப் பற்றி மின்னஞ்சலில் கேள்விகள் அனுப்பப்பட்டுள்ளன; பதில் வந்ததும் இந்தக் கட்டுரையில் அவை சேர்க்கப்படும்.

கடந்த கால வெள்ளங்களைப் பற்றிய ஆவணத்தை வெளியிட்டுள்ள சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், நாற்பதாண்டு காலமாக குறிப்பிட்ட இடைவெளிகளில் 2015க்கு முன்புவரை ஐந்து முறை அடையாற்றில் வெள்ளம் வந்ததைப் பதிவு செய்துள்ளது.

FloodsPastippodhu

நாற்பதாண்டுகளில் ஆறு முறை வெள்ளம் வந்துள்ள வரலாற்றைப் பார்க்கும்போது வடிவமைப்பு முதல் கட்டுமானத்தின் ஒவ்வொரு அம்சமும் வெள்ளத்தை மனதிற்கொண்டு செய்யப்பட வேண்டும்; வெள்ளத் தடுப்புச் சுவர், கட்டுமானத்தின் மேற்கூரையில் ஜெனரேட்டர்கள், கார் பார்க்கிங் வசதி போன்றவை அமைக்கப்பட வேண்டும்; “மாநகரத்தின் முக்கியப் பகுதியில் அமைவது மட்டுமே என்னை வாங்குவதற்குத் தூண்டாது; அங்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கின்றன என்பதும் எனக்கு முக்கியம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ராஜா.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்