வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்றும், மேலடுக்கு சுழற்சியால் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவுக்கு மேல் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குற்றாலத்தில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.