அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களுக்கு நாசாவில் அழைப்பு

NASA announced on Tuesday that it was seeking to boost its astronaut corps, which currently stands at 48 active personnel, as part of plans to dramatically expand its crewed space missions in the coming years.

0
96

அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களை பணியமர்த்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘நாசா’ முடிவு செய்துள்ளது.

நாசா நிர்வாக அதிகாரியான ஜிம் பிரிடென்ஸ்டைன் நேற்று(புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : சர்வதேச விண்வெளி நிலையத்தில், 20 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகிறோம். இதை கொண்டாடும்விதமாக, 2024 ஆம் ஆண்டு முதல் பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரையும் ஒரு ஆண் ஆராய்ச்சியாளரையும் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

அதற்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன.எங்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன், இணைந்து பணியாற்ற, திறமையான பெண்கள் மற்றும் ஆண்களை தேர்வு செய்து, பணியமர்த்த முடிவு செய்து உள்ளோம்.

விண்வெளி வீரர்களாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நபர்களுக்கான நேரம் இது. தகுதியுள்ள அமெரிக்கர்கள், மார்ச், 2 ஆம் தேதி முதல், விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, இரண்டு மணி நேர, ‘ஆன்லைன்’ தேர்வு இருக்கும். அந்த தேர்வை எழுதுவோரில் இருந்து, அடுத்தகட்ட ஆராய்ச்சியாளர்கள், 2021 ஆம் ஆண்டு மத்தியில், தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு, பயிற்சிகள் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, 38 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும், என அவர் கூறினார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here