அடுத்தவர்களை தாக்கி பேசி ஏன் ஓட்டு கேக்குறீங்க? சாதனைகளை சொல்ல வேண்டியதுதானே?: பாஜகவினருக்கு அகிலேஷ் யாதவ் கேள்வி

0
128

பிரச்சாரங்களின்போது பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சியினரை தாக்கி பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நடந்து வரும் பிரச்சாரங்களில் பாஜக தலைவர்கள் தங்கள் ஆட்சியில் என்ன சாதித்தோம் என்பதை சொல்ல மறந்து காவலாளி, நானும் காவலாளிதான், தேசபக்தி  , எதிர்க்கட்சியினரை வசவு பாடுதல் ஆகியவற்றை பற்றி மட்டும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தலைவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களையே தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்; ஏன், தங்களின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டியதுதானே என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகள்தான் வேண்டும். சவுகிதார் (காவலாளி) அல்ல.

உத்திரப் பிரதேச பாஜக ஆட்சியில் மற்றவர்களை ஒப்பிடுகையில் ஒப்பந்த ஆசிரியர்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த மோசமான நிலை மாற வேலையின்மை பிரச்சனையை போக்குவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.

பாஜகவின் பிரச்சாரக் கூட்டங்களில் பெரும்பாலும் எதிர்க்கட்சியினரையே ஏன் குறிவைத்து தாக்குகிறார்கள்? கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதித்தோம் என்று  சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா அவர்களுக்கு?

மக்களின் கோபத்தையும் , வரப்போகும் தோல்வியையும் கண்டு பாஜகவினர்  பயப்படுகிறார்கள்  என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here