மகாராஷ்டிரா வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாத டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் 11,400 கோடி ரூபாய் வரை முறைகேடாக பரிவர்த்தனை நடைபெற்றதாக, அந்த வங்கியின் நிர்வாகம் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தது. மேலும் வங்கி நிர்வாகம் சிபிஐயிடம் அளித்த புகாரின் அடிப்படையில் வைர வியாபாரியான நீரவ் மோடி, மீது அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து 800 கோடி ரூபாய்க்கு மேல் அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட ஐந்து வங்கிகளில் 800 கோடி ரூபாய்க்கும்மேல் கடன் மோசடி செய்ததாக ரோட்டோமேக் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, ஓரியண்டல் வங்கியில் 390 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக டெல்லியைச் சேர்ந்த துவாரகா தாஸ் சேத் இண்டெர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா வங்கிக் கிளையில், 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தைக் கொண்டு, 18 கோடி ரூபாய் கடனாகப் பெற்று வங்கியை ஏமாற்றியதாக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அமித் சிங்லா, அவரது தந்தை ரோஷன் லால் மற்றும் தாயார் சுமித்ரா தேவி உள்ளிட்டோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here