அடுத்தகட்டத் தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

0
144

தமிழகத்தில் 9 ஆம் கட்ட ஊரடங்கு  அக். 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு  தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(புதன்கிழமை) காணொலிக் காட்சி வழியாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அக்.1 முதல் தற்போது வரை செயல்பாட்டில் உள்ள 9 ஆம் கட்ட ஊரடங்கில் தொழில்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்த ஊரடங்கு அக். 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்டத் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து, இன்று (அக். 28) முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு, மருத்துவமனை படுக்கைகள், மருத்துவமனைகளில்உள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இன்று பிற்பகலில் மருத்துவக்குழு நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, அடுத்தகட்டத் தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகள் திறப்பு, பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here