அடக்குமுறை, மதவெறி, வெறுப்பை வீழ்த்த அன்பு, அகிம்சையை போதித்தவர் காந்தி: ராகுல் காந்தி

0
241

வெறுப்பைத் தோற்கடிக்க அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டுதலும், அகிம்சையும்தான் ஒரே வழி என்று மகாத்மா காந்தி மக்களுக்கு போதித்தார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா என்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மகாத்மாகா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பாத யாத்திரை நடத்தப்படுகிறது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில்  மகாத்மா காந்திக்கு 150-வது பிறந்தநாள் விழாவில் அவருக்கு என்னுடைய மரியாதையைக் காணிக்கையாக்குகிறேன். இந்தியாவின் தேசத்தந்தை காந்திஜி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்றும், அடக்குமுறை, சகிப்பின்மை, வெறுப்பு ஆகியவற்றை தோற்கடிக்க அகிம்சைதான் ஒரே வழி என்றும் போதித்தார்” என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், ” வன்முறையால் பிளவுபட்டுள்ள உலகில், மகாத்மா காந்தியின் தத்துவங்கள், போதனைகள் இன்றைய சூழலுக்கு பொருத்தமாக இருக்கின்றன. அகிம்சை, கருணை, உண்மை, சுய சார்பு ஆகியவை நாட்டை மட்டும் சீர்படுத்துவதோடு உலகிற்கு வழிகாட்டுபவை” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ட்விட்டரில் கூறுகையில், ” மகாத்மா காந்தியின் இந்தியாவில் 4 முக்கியத் தூண்கள் இருக்கின்றன. உண்மை, பொறுமை, அகிம்சை, பன்முகத்தன்மை கொண்டாட்டம் ஆகியவைதான். ஆனால் இப்போது, பொய் செய்தி, பொய் விவரம், பொய் குற்றச்சாட்டு, வார்த்தைகளைக் கூட தாங்க முடியாத சகிப்பின்மை, வன்முறை, பன்முகத் தன்மையை இலக்காக்குதல் போன்றவை இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here