அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜெய்ப்பூர் சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ”இந்தியாவில் 6.3 கோடி மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பது இல்லை”

ராஜஸ்தான் மாநிலத்தின், அஜ்மீர் நகரில் பிரசித்தி பெற்ற காஜா மொய்னுதீன் தர்ஹா உள்ளது. இங்கு கடந்த 2007ஆம் ஆண்டு, அக்டோபார் 11ஆம் தேதியன்று, நோன்பு திறக்கக் கூடியிருந்த மக்கள் மத்தியில் குண்டு வெடித்தது. இந்தக் குண்டுவெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையும் படியுங்கள் : மீண்டும் ரஜினி படத்தை மறுத்த வித்யாபாலன்…?

இது தொடர்பான வழக்கில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுமாமி அசீமானந்தா, சந்திரசேகர் லீவே, முகேஷ், வாஸனி, பாரத் மோஹன் ரதேஸ்வர், லோகேஷ் சர்மா, பாவேஷ் படேல், மெஹுல் குமார், ஹர்சத் சோலன்கி, மற்றும் தேவேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில், சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தும், பாவேஷ் படேல் மற்றும் தேவேந்திரா குப்தா ஆகியோரைக் குற்றவாளிகள் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையும் படியுங்கள் : ரஜினி படம் – தீபிகா இல்லை, குஷ்புக்கு வாய்ப்பு

இந்நிலையில் இந்த இருவருக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் புதன்கிழமையன்று (இன்று) அறிவித்தது. இதில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து ஜெய்ப்பூர் சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய யோகி ஆதித்யநாத்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்