தேவையான பொருட்கள்:

இஞ்சி – 20 கிராம்
தனியா – 2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
தேங்காய் – 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு
புளி கரைச்சல் – 1 கப்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இஞ்சியைத் தோல் சீவி, துருவி, கொஞ்சம் எண்ணெய்விட்டு வதக்கி அரைத்துக்கொள்ளவும். பின்னர் தனியா, உளுந்தம் பருப்பு,மிளகாயுடன், தேங்காயையும் சேர்ந்து வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது, தேங்காய், தனியா, மிளகாய் அரைத்த விழுது, இஞ்சி விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் பொங்கிவரும்போது, துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்.

இதனை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம். சுவையாகவும் சத்துக்கள் நிறைந்தும், ஜீரணத்துக்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here