அஜித் படம், அனிருத்துக்கு கல்தா…. காரணம் என்ன?

0
234
Ajith Kumar

அஜித்தின் விசுவாசம் படத்தில் அனிருத் இசையமைக்கவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அஜித்தின் வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு அனிருத் தொடர்ச்சியாக இசையமைத்தார். இரண்டும் சிவா இயக்கிய படங்கள் என்பது முக்கியமானது. இவர்கள் இணையும் விசுவாசம் படத்தில் அனிருத் அனேகமாக இல்லை. யுவனை ஒப்பந்தம் செய்ய உள்ளனர். இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன?

வேதாளம் படத்துக்கு காட்டிய ஆர்வத்தை அனிருத் விவேகம் படத்தில் காட்டவில்லை. தெலுங்குப் படத்துக்கு இசையமைப்பதால் விவேகத்தின் பின்னணி இசை சேர்ப்பையும் அதிக அக்கறையில்லாமல் செய்துள்ளார். அனிருத்தின் பிஸி ஷெட்யூல்ட் அப்படி.

அதன் காரணமாகவே யுவனை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த மாற்றத்தை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

இதையும் படியுங்கள்: வாடிப்பட்டியிலிருந்து வாஷிங்டனுக்கு….

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்