அஜித்தை இப்படியா கலாய்ப்பீங்க?

0
772
Ajith Kumar

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர் அஜித். அவர் செய்யும் வேலையால் (விவேகம் போன்ற படங்களில் நடிப்பதால்) சிலருக்கு நஷ்டமும், பலருக்கு கஷ்டமும் ஏற்பட்டாலும், யாரையும் புண்படுத்துகிற நோக்கம் அவருக்கில்லை. அவரைப்போய் ஏன் இப்படி கலாய்க்கிறார்கள்?

சிவா இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கப் போகும் விசுவாசம் படத்தில் அஜித் வடசென்னை பாஷை பேசி நடிக்கிறார் என்று வதந்தியை கிளப்பினார்கள். சாதா தமிழையே சிரமப்பட்டு பேசுகிற அஜித்துக்கு வடசென்னை தமிழ் எப்படி வணங்கப்போகிறது? இப்போது, அஜித் விசுவாசம் படத்தில் ஒரு பாடல் பாடப்போகிறார் என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

விசுவாசம் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். தான் இசையமைக்கும் படத்தின் நடிகர், நடிகைகள், இயக்குனர் என்று அனைவரையும் பாட வைப்பது இமானின் விஷப்பரீட்சைகளில் ஒன்று. அதனை மனதில் வைத்தே, விசுவாசம் படத்தில் அஜித் பாடுகிறார் என்று அடித்துவிட்டிருக்கிறார்கள்.

அஜித் வசனம் பேசுவது ரோடுரோலர் மாதிரி அத்தனை ஸ்லோவாக இருக்கும். அவர் பாடுவதா?

எதுக்கு இப்படி வதந்தியா கிளப்பி தலயை வம்புக்கு இழுக்கிறீங்க?

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள்: உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட 5 கேள்விகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்