அமிதாப்பச்சன்நடித்து இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது நேர்கொண்ட பார்வை. ஹெச்.வினோத் படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில்அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 8ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

அஜித்தின் 60வது படத்திலும் மீண்டும் அஜித் – போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் 60வது படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “அஜித் 60 படத்துக்கு நான் இசையமைக்கவில்லை. ஏற்கெனவே பல படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.