அஜித்தின் விசுவாசம் ஹீரோயின் யார்? – அதிகாரபூர்வ அறிவிப்பு

0
208
Ajith Kumar

அஜித்தின் விசுவாசம் படத்தின் நாயகி யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விவேகம் படத்தின் நஷ்டம் காரணமாக மீண்டும் சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு கால்ஷீட் தந்துள்ளார் அஜித். சிவா இயக்கும் இந்தப் படத்துக்கு விசுவாசம் என பெயர் வைத்து, எளிமையாக பூஜையும் நடத்தினர். வெற்றி ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங்கை கவனிக்க உள்ளார். படத்தின் நாயகி யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நயன்தாரா விசுவாசத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பில்லா, ஏகன், ஆரம்பம் என மூன்று படங்களில் அஜித் – நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர். விசுவாசம் அவர்கள் இணையும் நான்காவது படம். இந்த மாதம் 22 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: 4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு? – அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்