அஜித்தின் விசுவாசம் – லேட்டா தொடங்கினாலும் பாஸ்டா வருமாம்

0
451

விஜய் இரண்டிரண்டு ஸ்டெப்களாக முன்னேறிக் கொண்டிருக்க, இரண்டு படங்களுக்கு நடுவில் நீ….ண்ட இடைவெளிவிட்டு ரசிகர்களை ஏங்க வைக்கிறார் அஜித். விசுவாசம் படம்கூட ஜனவரியில் தொடங்கும் என்றார்கள். ஆனால், இன்றுவரை எந்த சலனமும் இல்லை. இந்நிலையில் ஒரு இனிய செய்தி விசுவாசம் டீமிடமிருந்து.

பிப்ரவரி 22 ஆம் தேதி விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். ஏன் இந்த தாமதம்? எத்தனை மாசமானாலும் முழு ஸ்கிரிப்டை முடித்த பிறகு படப்பிடிப்புக்கு போனால் போதும் என்று தயாரிப்பாளர் தியாகராஜன் கறாராக கூறிவிட்டார். ஸ்கிரிப்டை முடிக்கவே இந்த காலதாமதம்.

படப்பிடிப்பை தாமதமாக தொடங்கினாலும் குடும்ப சென்டிமெண்ட் படம் என்பதால் விரைவாக படப்பிடிப்பை முடிந்து நவம்பர் மாதம் தீபாவளிக்கு படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே விஜய் – முருகதாஸ் படம் தீபாவளி வெளியீடு என அறிவித்திருக்கிறார்கள். சூர்யா – செல்வராகவன் படமும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்துள்ளனர். இப்போது அஜித் – சிவா படம்.

விஜய்யுடன் நேரடிப் போட்டியில் இறங்க அஜித் ஆர்வம் காட்ட மாட்டார் என்பதால் விசுவாசம் நவம்பருக்கு முன்பு திரைக்கு வரவும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்: பசுக் காவலர்களின் வன்முறையைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here