அஜித்தின் நேர்கொண்ட பார்வை பாடல் நாளை வெளியீடு

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். இந்தி பிங்க் படத்தின் ரீமேக்காக தயாராகிவரும் இந்தப் படத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க வினோத் படத்தை இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 8 படம் திரைக்கு வருகிறது.

மாதவன் படத்தில் சூர்யா, ஷாருக்கான்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார் மாதவன். இதில் நம்பி நாராயணனாக நடிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார். அவரது மனைவியாக சிம்ரன். சமீபத்தில் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் பதிப்பில் சூர்யாவும், இந்தி பதிப்பில் ஷாருக்கானும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளனர். சாம் சி.எஸ். படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் Nப்பர் ஹீரோவாகும் லாரன்ஸ்

லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தை தமிழகத்தில் சன் பிக்சர்ஸ் விநியோகித்தது. லாரன்ஸ் நடிக்கும் படத்தையும் அவர்கள் தயாரிக்கிறhர்கள். இந்தப் படத்தில் லாரன்ஸ் காமெடி சூப்பர் ஸ்டாராக நடிக்கிறார். குழந்தைகள், பெண்களை குறி வைத்து எடுக்கப்படும் படம் என்பதால் 3டி யில் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. தற்போது காஞ்சனா படத்தை அக்ஷய், கியாரா அத்வானி நடிப்பில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் இயக்கி வருகிறார் லாரன்ஸ்.

யோகி பாபு நாயகனாகும் மண்டேலா

கூர்கா படம் வெளியான போது, இனிமே ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்றார் யோகி பாபு. அப்படி அவர் கூறும் போதே மூன்று படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். இப்போது மேலும் ஒரு படம் அவர் ஹீரோவாக நடிக்க தயாராகிறது. ஒய் நாட் ஸ்டுடியோவும், ஓபன் விண்டோ தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை மடோனி அஸ்வின் இயக்குகிறார். படத்துக்கு மண்டேலா என பெயர் வைத்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். இன்று பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

பேரரசு இயக்கத்தில் விஜய்…?

திருமலை படத்தில் ஆக்ஷன் ஹீரோவான விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திய படம் திருப்பாச்சி. பேரரசு இயக்கிய இந்தப் படம் அனைத்து சென்டர்களிலும் ஹிட்டானது. அவர் விஜய்யை வைத்து அடுத்து இயக்கிய சிவகாசியும் பட்டாசை கிளப்பியது. தற்போது படமில்லாமல் இருக்கும் பேரரசு விஜய்யிடம் ஒரு கதை கூறியுள்ளார். கதை விஜய்க்குப் பிடித்துப் போக நடிப்பதாக வாக்களித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் படத்துக்குப் பிறகு பேரரசு இயக்கத்தில் விஜய் நடிக்கலாம் என்கின்றன செய்திகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here