இந்தியில் வெளியான பிங்க் படத்தை நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் போனி கபூர் தமிழில் தயாரித்து வருகிறார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த வழக்கறிஞர் வேடத்தை தமிழில் அஜித் செய்கிறார். உடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். ஹெச்.வினோத் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படம் மே 1 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10 படம் வெளியாகும் என அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் சுரேஷ் சந்திரா, நேர்கொண்ட பார்வையை ஆகஸ்ட் 10 வெளியிடுவதாக போனி கபூர் முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். ஹெச்.வினோத்தே அந்தப் படத்தையும் இயக்குகிறார். அப்படம் 2020 ஏப்ரல் 10 வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here