“அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம் செய்த கோடக் மஹிந்திரா வங்கி

0
585

கேரள மாநிலம் கொச்சியில் ,கோடக் மஹிந்திரா வங்கியின் பளரிவட்டோம் கிளையின் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் விஷ்ணு நந்தகுமார். சமூக ஊடகத்தில் “நல்ல வேளையாக இந்தச் சிறுமி 8 வயதிலேயே கொல்லப்பட்டுவிட்டார், இல்லையென்றால் இவள் வளர்ந்து இந்தியா மீது வெடிகுண்டு வீசுவார் என்று விஷ்ணு நந்தகுமார் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.

Screen Shot 2018-04-14 at 12.57.42 PM

Screen Shot 2018-04-14 at 12.52.51 PM

இந்த கருத்து எப்போது பதிவிடப்பட்டது என்று தெரியவில்லை. எனினும் இந்தப் பதிவு பரவலாக பகிரப்பட்டதோடு வங்கியின் முகநூல், டிவிட்டர் பக்கத்தில் விஷ்ணு நந்தகுமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். டிவிட்டரிலும் உங்கள் மேலாளரை (#Dismiss_your_manager) பணிநீக்கம் செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் டிரென்ட் ஆனது.

இதனையடுத்து கோடக் மஹிந்திரா வங்கி வெளியிட்ட ‘விஷ்ணு நந்தகுமாரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை ஏப்ரல் 11, 2018ம் தேதி பணிநீக்கம் செய்து விட்டோம். எங்கள் வங்கியின் முன்னாள் ஊழியர் இது போன்றதொரு மோசமான கருத்தை பதிவிடுவது எங்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. விஷ்ணு நந்தகுமாருக்கு எங்களின் கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறோம் என்றும் வங்கி குறிப்பிட்டுள்ளது.

விஷ்ணு நந்தகுமார் உள்ளூர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக குடும்பத்தை சேர்ந்தவர் என்று என்டிடிவி குறிப்பிடுகிறது.

நன்றி : NDTV

இதையும் படியுங்கள்: கர்நாடக தேர்தல்: வெல்வது யார்?; மாறும் கருத்துக் கணிப்பு முடிவுகள்; முந்துகிறதா பாஜக?

இதையும் படியுங்கள்: உன்னாவ், கத்துவா பற்றிய கார்ட்டூன்கள் (தொகுப்பு)

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”