அசாமில் உள்நாட்டு மக்களை கண்டறிய குழு

A Home Ministry-appointed committee has suggested that 1951 should be the cut-off year for defining the indigenous people of Assam and introduction of the Inner Line Permit (ILP) to control the movement of people from outside the state, sources said on Monday.

0
169

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை மதவேறுபாடு பாராமல் வெளியேற்றவேண்டும் என்று அசாம் மக்கள் 6 ஆண்டுகள் போராடியதன் பலனாக, அரசுக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையில் 1985 ஆம் ஆண்டு புகழ்பெற்ற அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு அரசு ஒப்புக்கொண்டது. அதை நிறைவேற்றுவதற்கு பதிலாக 2014 ஆம் ஆண்டுவரை சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம் அல்லாத பிரிவினருக்கு குடியுரிமை தருவதற்கு வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதாவை பாஜக அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது.

எனவே, தங்கள் மொழி, இன பண்பாட்டு அடையாளம் முற்றிலும் அழிந்துவிடும், வங்காளிகள் எண்ணிக்கை அசாமில் அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்து அசாம் மக்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அசாமில் உள்ள உள்நாட்டு மக்களை கண்டறிய, 1951 ஆம் ஆண்டை, கடைசி வருடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசின் குழு பரிந்துரைத்துள்ளது.

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய ஏராளமான மக்கள் அசாமில் வசித்து வருகின்றனர். இவர்களை கண்டறியும் விதமாக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. ஆனால் சில குளறுபடிகள் காரணமாக இந்த பதிவேடு தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அசாமில் உள்ள உள்நாட்டு மக்களை கண்டறிய,1951 ஆம் ஆண்டை, கடைசி வருடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து உள்ளே நுழையும் மக்களுக்கு, ஐ.எல்.பி., எனப்படும், உள்நாட்டு நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here