அசரவைக்கும் சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி

Gross domestic product (GDP) grew 4.9% in July-September from a year earlier, official data showed on Monday, slower than the 5.2% forecast by analysts in a Reuters poll but faster than the second quarter’s 3.2% growth.

0
186

பெய்ஜிங்: 

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு, கடந்த காலாண்டில் அதாவது ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் பொருளாதாரத்தில் 4.9சதவீத வளர்ச்சி கண்டுள்ளது சீனா.

ஆனால் 2020ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடர்ந்து சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவிலிருந்து மீண்டு வருகிறது.

இருப்பினும் இந்த வளர்ச்சி பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட்ட 5.2 சதவீதத்தைக் காட்டிலும் குறைவாகத்தான் உள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் சீனாவின் பொருளாதாரம் 6.8 சதவீத அளவு குறைந்தது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், சீனாவின் பொருளாதார வளா்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 3.2 சதவீதமாக இருந்தது.

சீனாவில் தற்போது தொற்று பரவல் பெருமளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

முக்கியமாக மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளும் தொடா்ந்து இயங்கி வருவதால்உற்பத்தி அதிகரித்துள்ளது. முகக் கவசங்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் தேவை சா்வதேச அளவில் அதிகரித்துள்ளதால், அவற்றை அதிக அளவில்உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருகிறது.

நடப்பாண்டில் சீனாவின் பொருளாதாரம் மட்டுமே வளா்ச்சியைக் காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான் உள்ளிட்டவற்றின்பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று வெளியிடப்பட்டபொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்கள், சீனா பொருளாதாரம் வேகமாக சரிவிலிருந்து மீண்டு வருகிறது என்பதை காட்டுகிறது. ஆனால் இந்ததகவல்கள் எந்த அளவிற்கு துல்லியமானது என நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here