ரெட்மி நிறுவனம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி சீனாவில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அத்துடன் ரெட்மிடி.வி. ஒன்றும் அறிமுகம் செய்யப்படுகிறது. 

புதிய ரெட்மி நோட் 8 ப்ரோஸ்மார்ட்போனில் 64 எம்.பி.பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. புதியஸ்மார்ட்போனில் சாம்சங்கின் 1/7″ 0.8 μm பிக்சல் 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாக் மற்றும் பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கிறது.

இந்த சென்சார் 1.6μm பிக்சல்களில் 4-இன்-1பிக்சல் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது. தன் மூலம் குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இத்துடன் ஸ்மார்ட்ஐ.எஸ்.ஒ. டூயல் கன்வெர்ஷன் கெயின் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.ஹைப்ரிட் 3டிஹெச்.டி.ஆர். அம்சம் 100 டெசிபல்களில் தலை சிறந்த புகைப்படங்களை வழங்கும்.