அசத்தல் பேட்டரியுடன் வெளிவந்த ரியல்மி சி12

The smartphone also comes with a rear-mounted fingerprint scanner and packs a 6,000 mAh battery that draws power through a microUSB port.

0
148

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது சி12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மியுஐ, 6.5 இன்ச் ஹெச்டிபிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம்  வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

1596789199740

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் ரியல்மி சி12 புது வேரியண்ட் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய வேரியண்ட்டை விட ரூ.1000அதிகம் ஆகும்.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here