இந்தியாவில் ஜியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ- எம்.ஐயுடன் தீபாவளி சேலின் போது விற்பனைக்கு வரும். இதன ஆரம்ப விலை விலை 12,999.

ஜியோமியின் இந்திய தலைமையகம், எம்ஐ-யுடன் ‘தீபாவளி சேல்’ என்ற வருடாந்திர விற்பனையை மீண்டும் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை அக்.23ல் தொடங்கி அக்.25ல் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை எம்ஐ இணையதளத்தில் மட்டுமே நடைபெறும். இதில், தள்ளுபடி விலையில் குறுகிய கால ஆஃபர், கேஷ் பேக், மொபைல் கூப்பன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளது. 

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோவிற்கு (ரூ.12,862) 2000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. ரூ.12,999க்கு 4ஜிபி ரேம்/64ஜிபி மற்றும் ரூ.14,999 6ஜிபி ரேம்/64ஜிபி உட் சேமிப்பு திறன் கொண்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ கிடைக்கும். இதேபோன்ற தள்ளுபடியை ரெட்மி ஒய்2 பெற்று ரூ.10,999 விற்பனைக்கு வர உள்ளது.

ஜியோமி தனது ஆஃப் லைன் விற்னையிலும் தள்ளுபடி வழங்க உள்ளது. தீபாவளி விற்பனையில், எம்ஐ எல்இடி 4ஏ 43 இன்ச் டிவி யின் விலையில் 1000 குறைக்கப்பட்டு 21,999க்கு விற்பனை செய்யப்படும். 

ஆடியோ பாகங்களான, எம்ஐ ப்ளூடூத் ஹெட் செட் பேசிக் பிளாக் ரூ799க்கும், எம்ஐ இயர் போன் பேசிக் ரூ. 349க்கும், எம்ஐ ப்ளூடூத் ஆடியோ ரிசிவர் ரூ.899க்கும் மற்றும் எம்ஐ ப்ளூடூத் ஸ்பீக்கர் பேசிக் 2 ரூ. 1,599க்கும் பெறலாம். 

இந்த ஆண்டு ஜியோமி இந்தியாவிற்கு மிக சிறப்பான ஆண்டு, நாம் கண்டது போல, விழாக்கால சலுகை தொடங்கி இரண்டறை நாட்களில் 2,5 மில்லியன் பொருட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது என்று ஜியோமி இந்தியாவின் தலைமை அதிகாரி ரகு ரெட்டி
கூறியுள்ளார். மேலும் அவர் பேசிய போது 

இதுபோன்ற சலுகைகளை தரமான பொருட்கள் மீது தொடர்ந்து வழங்க விருப்பப்படுவதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here