அக்டோபர் 11: உலக பெண் குழந்தைகள் தினம்

International Day of Girl Child 2020 is very special. This year the theme of International Day of the Girl Child is "My voice, our equal future".

0
1473

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது.

அது முதல் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை ஒன்பதாவது ஆண்டு பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என்றும், அதன் மூலம் சமூகம் முன்னேறும் என்றும் வலியுறுத்துகிறது ஐ.நா. இந்நாளில், உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

கத்துவா, உன்னாவ், ஹத்ராஸ் போன்ற சிறுமிகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள், இந்நாளுக்கான முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகெங்கும் இதுபோன்ற கொடூர செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.

இதை நாமும் கொண்டாடும் வகையில், தலைசிறந்த பெண்ணியவாதிகளின் கூற்றுகளை இங்கே பார்க்கலாம்.

 • பெண்கள் தங்களைப் பார்த்துசிரிக்கிறார்கள் என்று ஆண்கள் பயப்படுகிறார்கள். ஆண்கள் தங்களை கொல்கிறார்கள்என்று பெண்கள் பயப்படுகிறார்கள்.” – Margaret Atwood
 • பெண்கள் சக்திபடைத்தவர்கள், பயங்கரமானவர்கள்.” – AudreLorde
 • பெரும்பாலான வரலாற்றில், அடையாளம் இல்லாத பெண் ஒருவள்இருக்கிறாள்.” – Virginia Woolf
 • பெண்ணியம் என்பது பெண்களைவலிமையாக்குவதற்கு இல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான். உலகம் அந்தவலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை இது மாற்றியது.” – G.D.Anderson
 • பெண்ணியத்தால், எந்தவொரு பெண்ணுக்கும் வேலைகிடைத்துவிடப்போவதில்லை. எல்லா இடங்களிலும் வாழும் பெண்களின் வாழ்க்கையை மேலும்அழகாக்கவே.” – Gloria Steinem
 • மறைந்து போவதிலும், அழிந்து போவதிலும் நான்எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.” – Laverne Cox
 • பெரியவர்களுக்கு தான், சிறு பெண் பிள்ளைகள் அழகாகதோன்றுகிறார்கள். சக பிள்ளைகளிடையே அவர்கள் அழகானவர்களாக பார்க்கப்படுவதில்லை.அவர்கள் வாழ்க்கை அளவிலானவை.” – Margaret Atwood
 • நான் எதையாவது சாதிக்க முடியும்என்ற உண்மையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் நானே என்னை கட்டுப்படுத்தபோவதில்லை.” – Dolly Parton
 • வழிநடத்தும் பெண்கள், படிக்கவேண்டும்.” – LauraBates
 • தங்களை தாங்களே வெறுக்காத சிலர், பெண்ணைச் சுற்றி இருக்கும் போது, உண்மையில் அசௌகரியமாகஉணருகிறார்கள். இதனால், நீங்கள் சற்று தைரியமானவராகஇருக்க வேண்டும்.” – Mindy Kaling
 • தைரியம், தியாகம், தீர்மானம், அர்ப்பணிப்பு, கடினத்தன்மை, இதயம், திறமை, தைரியம். சிறிய பெண் பிள்ளைகள்இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர்.” – Bethany Hamilton
 • ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்கமுடிகிறது எனில், ஏன் ஒரு பெண்ணால் அதை மாற்றமுடியாது?” – Malala Yousafzai

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here