அகிலாவுக்கு……

குரங்கணி-நரிப்பட்டி-ஒத்தமரம்-கொழுக்குமலை டிரெக்கிங் பாதையில் உயிரிழந்த அகிலாவுக்கு.....

0
844

உன் தனிமையின் உச்சங்களைத்
தொலைக்கவே
மலையுச்சிகளை நாடினாய்.
உயர்ந்து உயர்ந்து
விண்ணைத் தொடவே
மலை முகடுகளில் ஏறி நின்றாய்.

பெருநகரத்து இரைச்சல்களிலிருந்து வெளியேறி
பசுமைகளின் நிச்சலனத்தில்
அடைக்கலமானாய் நீ.
தீயைத் தொட்டு விளையாடும்
பயமறியா பருவத்தில்
தீக்குள் சங்கமமானாய்.

நீ விட்டுச்சென்ற சொற்களால்
இன்னும் பல வீரப் பெண்கள்
அடக்குமுறைச் சாம்பல்களிலிருந்து மேலெழுவார்கள்.

ஒக்கி புயல்: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்