அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் செல்வாக்குள்ள ஒருவரின் பெயரைக் கூறுமாறு அமலாக்கத்துறை நெருக்கடி அளிக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்த்தான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அகஸ்டாவெஸ்ட் லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்த்தான் டெல்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கூறும்போது, செல்வாக்குள்ள ஒருவரை இந்த வழக்கில் சிக்கவைக்குமாறு தன்னை அமலாக்கத்துறையினர் வற்புறுத்தி வருவதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதாவது கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடந்த ‘எந்த ஒரு பாதுகாப்புத்துறை ஒப்பந்தமாயினும்’ சரி செல்வாக்குள்ள ஒருவரை சிக்கவைக்குமாறு தனக்கு அமலாக்கப்பிரிவினர் நெருக்கடி கொடுப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிறப்பு நீதிபதி அர்விந்த் குமார் முன்பு கருப்பு பணம் மற்றும் நிதிமுறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கவுதம் கெய்த்தான் இன்று வாக்குமூலம் அளித்தார். கெய்த்தான் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் முதல் பிற ஆயுத ஒப்பந்தங்களிலும் சம்பந்தபட்டவர் என்று அமலாக்கப்பிரிவு கூறியது.

வழக்கறிஞர் கெய்த்தானின் வழக்கறிஞராக வாதாடிய துபே தற்போதைய வழக்குக்கு புதிய அடிப்படை எதுவும் இல்லை என்றார்.

கெய்த்தானின் வழக்கறிஞர் துபே கூறும் போது என் கட்சிக்காரர் கெய்த்தானிடம் விசாரித்த அமலாக்கப்பிரிவினர் காங்கிரஸ் ஆட்சியின் எந்த ஒரு பாதுகாப்புத்துறை ஒப்பந்தமாயினும் ஈடுபட்ட எந்த ஒரு நபரின் பெயரையாவது கூறு என்று வற்புறுத்துகின்றனர் 2 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு பெயர் வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் என்றார்.

மேலும் இதே வழக்கில் கெய்த்தான் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று துபே நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதுதவிர ஏகப்பட்ட வருமான வரி புகார்கள் கெய்த்தான் மீது செய்யப்பட்டுள்ளது.

கெய்த்தான் சார்பாக கூறிய போது, “ஒரே குற்றத்துக்காக வருமானவரிச் சட்டத்தில் என்னை விசாரித்தனர், கருப்புப் பணம், அடுத்து நிதி முறைகேடு என்று குற்றம்சாட்டுகின்றனர், என்னை அவசரம் அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம்தான் என்ன? நான் ஆஜராகாத சம்மன் ஏதாவது இருக்கிறதா? இப்போதைய வழக்குக்கு புதிய அடிப்படை எதுவும் இல்லை.

எந்த ஒரு புதிய சட்டம் வந்தாலும் என்னை அதில் கைது செய்து குரங்காக்கி சோதித்துப் பார்க்கின்றனர்.

அமலாக்கப் பிரிவினர் தன் வாதத்தில், இந்த வழக்கு அகஸ்டாவெஸ்ட்லேண்ட் பற்றியதல்ல கெய்த்தானுக்கு இருக்கும் அயல்நாட்டு வங்கிக் கணக்குகள் பற்றியது அதாவது கருப்புப் பணம் பற்றியது என்று வாதிட்டது. அடையாளம் காணப்படாத இவரது சொத்துக்கள் மதிப்பு ரூ.500 கோடிக்கும் அதிகம் என்றும் அமலாக்கப்பிரிவு கூறியது.

Courtesy : Hindustan Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here