அடுத்து அகழாய்வு செய்யும் பட்டியலில் பாபா அணு ஆராய்ச்சி மையம் இல்லை என்று நம்புகிறேன்.’ – மஹுவா மொய்த்ரா

பா.ஜ.க-வின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா முக்கியமானவர். அவ்வப்போது பா.ஜ.க-வின் குறைகளை நாடாளுமன்றத்திலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். அதனால் அடிக்கடி விமர்சனத்துக்கும் ஆளாகுவார்.

இந்த நிலையில், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது எனத் தொடரப்பட்ட வழக்கில், `மசூதிக்குள் சிவ லிங்கம் இருப்பின் அது பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரம் முஸ்லிம்களும் தொழுகை நடத்துவதை நிறுத்த வேண்டாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, “அடுத்து அகழாய்வு செய்யும் பட்டியலில் பாபா அணு ஆராய்ச்சி மையம் இல்லை என்று நம்புகிறேன்….” எனப் பதிவிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here