அகமதாபாத் – மும்பை இடையேயான ’புல்லட்’ ரயில் இயக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா, அகமதாபாத்தில் வியாழக்கிழமை (நாளை) நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவும் புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுகின்றனர்.

1. திட்டத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்; இத்திட்டத்தின் மதிப்பீட்டில் 81 சதவிகிதம் வரை ஜப்பான் நாடு கடனுதவி செய்கிறது. இதற்கு 0.1 சதவிகித வட்டியை நிர்ணயித்துள்ளது.

2. இந்த புல்லட் ரயில் 750 பேர் வரை பயணிக்கலாம்.

3. இந்த புல்லட் ரயிலின் வேகம், மணிக்கு 250 முதல் 320 கிலோமீட்டர் பயணிக்க முடியும்.

4. அகமதாபாத்-மும்பை இடையேயான 508 கிலோமீட்டர் தூரத்தில், 92 சதவிகிதம் மேம்பாலத்திலும், ஆறு சதவிகிதம் சுரங்கப் பாதையிலும், இரண்டு. சதவிகிதம் தரையிலும் பயணிக்கும். அகமதாபாத்-மும்பை இடையே 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

5. 21 கிலோமீட்டர் துார சுரங்கப்பாதையில் ஏழு கிலோமீட்டர் துாரம் கடலுக்கு அடியில் அமைகிறது. இந்த புல்லட் ரயில், 351 கிலோமீட்டர் குஜராத் மாநிலத்திலும், 156 கிலோமீட்டர் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பயணிக்கும்.

இதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்