இம்மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கி அக்.4 வரை  ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019ல் குறைந்த விலை விற்பனையில் இடம்பெறவுள்ள சில போன்களின் விவரங்களை ஃப்ளிப்கார்ட் வெளியிட்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனையை ஃப்ளிப்கார்ட் வரும் செப்.30ஆம் தேதி தொடங்க உள்ளது. 

இதேபோல், ஃப்ளிப்கார்ட் இணைதளம் செப்.20 முதல் தினமும் பிக் பில்லியன் டேஸில் இடம்பெற உள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தள்ளுபடி விலையுடன் அறிவிக்க உள்ளது.

இதில், ஆப்பிள், ஜியோமி, ரியல்மி, ஓப்போ, கூகுள், இன்பினிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் இடம்பெற உள்ளன.  இதில், ரெட்மி நோட் 7 ப்ரோ, ரியல்மி 5, ஓப்போ F11 ப்ரோ, ரெட்மி 7A, ரியல்மி C2 உள்ளிட்ட பல போன்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

ஏற்கனவே கூறியதுபோல், இந்த விற்பனையில் ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் பயனாளர்கள் 4 மணி நேரம் முன்னதாகவே ஆர்டர் செய்யலாம். இந்த விற்பனையின்போது, பல்வேறு லோன் ஆப்ஷன்களையும் நீங்கள் பெறும் வகையில், ஃப்ளிப்கார்ட் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

இந்த தள்ளுபடி விற்பனையின் போது, ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்களை வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும் என ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. மேலும், இந்த பிக் பில்லியன் டேஸ் சேலில், சாம்சங் S9+, ரியல்மி 3 ப்ரோ, மோட்டோரோலா ஒன் விஷன், ரெட்மி நோட் 7s உள்ளிட்ட பல போன்களும் விற்பனைக்கு வருகின்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here