சாம்சங் விரைவில் அதன் கேலக்ஸி எஃப் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது. இது ஏப்பிரல் மாதத்திற்குள் கடைகள் ஆக்கிரமிக்கக்கூடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹுவாய் தனது 5G ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனையும் அறிவிக்கும், அது அதே ஏப்பிரல் மாதத்தில் தொடங்கும். மற்றும் ஜியோமி நிறுவனம் ஏற்கனவே தன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் டீசர்களை வலைத்தளங்களில் கசிய விட்டிருக்கிறது.

intel-foldable-smartphone-patent-1

இந்நிலையில் இன்டெல் நிறுவனம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச காப்புரிமை அலுவலகம் மற்றும் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் இன்டெல் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் இன்டெல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் டேப்லெட் உள்ளிட்ட பல முறைகளில் இயங்கக்கூடிய விண்டோஸ் 10ல் இயங்கும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை கற்பனை செய்து பாருங்கள்.

இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் திறக்கப்பட்ட நிலையில் மடிக்கணினி போன்று பெரிய திரையுடன் காட்சியளிக்கிறது. இன்டெல் வடிவமைக்கும் இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் மொத்தம் மூன்று டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று டிஸ்ப்ளேக்களும் சமமான அளவுள்ள மூன்று பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

லெட்ஸ்கோடிஜிட்டல், இன்டெல் கார்ப்பரேஷன் சார்பில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்டெல் காப்புரிமை விண்ணப்பத்தின் தலைப்பு மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்கள் கொண்ட மின்சாதம் என குறிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விவரங்களின் படி முழுமையாக மடிக்கப்பட்ட நிலையில், இந்த சாதனத்தை ஸ்மார்ட்போன் போன்று பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

intel-foldable-smartphone-concept-2

இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, சுற்றிலும் பெசல்கள் இல்லாமல் இருக்கிறது. மேலும் கேமரா, சென்சார்கள் மற்றும் ரிசீவர்கள் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்படுகிறது. ஸ்மார்ட்போனினை இருமுறை திறந்தால், பெரிய டேப்லெட் போன்று பயன்படுத்தலாம். இதன் தடிமன் மற்றும் எடை அதிகமாகவே இருக்குமென தெரிகிறது.

மூன்று பகுதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு கேமராக்கள் என மொத்தம் ஆறு கேமராக்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் காந்தம் போன்று இணைத்து கொள்ளக்கூடிய ஸ்டைலஸ் பென் ஒன்றும் வழங்கப்படுகிறது.

ஆனால் கிடைத்த தகவல்களின் படி இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் வெளிவருவதற்கு இன்னும் சிலகாலங்கள் ஆகலாம் என்றே தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here