இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம், ஸ்போர்ட் எடிஷன் போலோ, ஏமியோ மற்றும் வென்ட்டோ ஆகிய மூன்று மாடல்களை சிறப்பு பதிப்பாக (Special Edition) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று கார்களின் அழகைக் கூட்டும் விதத்தில் சில ஸ்டிக்கர் வேலைப்பாடுகளுடன் இந்த கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் ஸ்போர்ட் எடிஷன் கூடுதலான விலை மாற்றம் செய்யப்படாமல், கூடுதல் வசதிகள் கொண்ட ஸ்போர்ட் எடிஷன் என்ற பெயரில் அமியோ, போலோ மற்றும் வென்டோ கார்களில் கார்களில் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கதவுகளில் கீழ்புறத்தில் கருப்பு வண்ண கோடுகள் வசீகரத்தை அதிகப்படுத்துகின்றன. கருப்பு வண்ண ரியர் ஸ்பாய்லர் மற்றும் கார்பன் ஃபினிஷ் ரியர் வியூ கண்ணாடிகளும் இந்த காரின் விசேஷ அம்சங்களாக இருக்கின்றன. வெளிப்புறத்தில் மட்டுமே இந்த அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இன்டிரியர் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் வழங்கப்படவில்லை.

போலோ, அமியோ கார்களில் முந்தைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக கூடுதலான மைலேஜ் தரவல்ல 1.0 லிட்டர் MPI பெட்ரோல் எஞ்சின் 75 ஹெச்பி ஆற்றல் மற்றும் 95 என்எம் இழுவைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வென்ட்டோ மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2லிட்டர் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கின்றது. மூன்று மாடல்களில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு மாடல்களுக்கு அனைத்துமே பட்ஜெட் விலையிலேயே கிடைக்கிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் #BeASport என்ற பெயரில் சிறப்புத் திட்டத்தையும் ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, இந்த மூன்று கார்களை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாடிக்கையாளர், ஒரு ஸ்லோகன்(slogan) எழுதி கார் ஒன்றைப் பரிசாக பெறும் வாய்ப்புள்ளது.

கிரிக்கெட், கால்பந்து என விளையாட்டு ஜுரம் ரசிகர்களை தொற்றிக் கொண்ட இந்த வேளையில்,ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கான இந்த விசேஷ பரிசுத் திட்டமும், சிறப்பு பதிப்பு மாடல்களும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஆரம்ப விலை ரூ. 5.41 லட்சம், ஃபோக்ஸ்வேகன் அமியோ ஆரம்ப விலை ரூ. 5.50 லட்சம் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆரம்ப விலை ரூ. 10.70 லட்சமாகும்.

இந்த சிறப்பு பதிப்பு மாடல்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஃபோக்ஸ்வேகன் டீலர்களிலும் கிடைக்கும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here