ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் கடந்த ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. தற்சமயம் இதே அம்சம் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது.

ஐ.ஓ.எஸ். 191.0 வெர்ஷனின் குறியீடுகளில் கலர் கிரேடியன்ட்கள், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவை வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதியை வழங்குவதாக குறிப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் மெசஞ்சர் செயலியில் குறுந்தகவல்களை அனுப்பிய 10 நிமிடங்களுக்குள் அதனை திரும்பப் பெறவோ அல்லது அழிக்கவோ முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here