(செப்டம்பர் 5,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

சாமானியர்கள் பதிவு – 2

ஃபேஸ்புக்கே வெறிச்சோடி போயிருக்கா? அப்ப கண்டிப்பா அந்த நாலு பேரும் எந்த ஸ்டேட்டஸும் போட்டிருக்க மாட்டாங்கன்னு ஈஸியா ஒரு முடிவுக்கு வந்துடலாம். அட ஆமாங்க புதுசு புதுசா ஃபேஸ்புக்கில ஒரு ஸ்டேட்டஸ போட்டுவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் உணர்ச்சிவசப்படுத்திவிட்டு கடைசியில அவர்களே வந்து சமாதானம் செய்து வைக்கும் அளவிற்கு நால்வரும் ஃபேஸ்புக்கில் அப்படிப் பிரபலம். சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ‘ட்விட்டர் பெருசா? ஃபேஸ்புக் பெருசா’னு புதிய கேள்வியை இவர்கள் தொடுக்க ஒட்டுமொத்த ஃபேஸ்புக் மக்களும் சீரியஸாய் பதிவுகள் போட அதுல எதையும் சீரியஸாய் எடுத்துக்காம அடுத்த மேட்டருக்கு தாவி விட்டாங்க இவங்க. இப்படி பரபரப்பாய் இருப்பவர்களின் ஃபேஸ்புக் பக்கம் போனால் எனிடைம் ஸ்டேட்டஸ்களால் அப்ளாஸ் அள்ளுகிறார்கள்.

அட! என்னதான் அப்படி ஸ்பெஷல்னு பார்த்தா கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் அளவிற்கு வசனங்களை தாறுமாறாக அள்ளிவிடுகின்றனர் நால்வரும். சாமானிய மனிதர்கள்தான். ஆனால் தினம் ஒரு தகவல்களோடு பல ஆயிரம் ஃபாலோவர்ஸோடு செம ஜாலியாய்ப் பயணிப்பவர்களுடன் நாமும் பயணித்தோம்.

முக்கியமான ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கில் உபயோகிக்கும் வார்த்தைகளை ட்ரெண்ட் ஆக்கியதில் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. தோழர்களை டோலர்கள் எனவும் நண்பர்களை ப்ரெண்ட்ச்ச் எனவும் இவர்கள் பதிவிட்ட ஸ்டேட்டஸ்கள் எக்கச்சக்கம். எந்த நேரத்தில் சீமான் தன்னின் உடன்பிறப்புகளை ‘‘உறவுகளே” என அழைக்க ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து இவர்கள் ‘‘ஒரவே” என அழைத்து ட்ரெண்டாக்கினர். (அவர் அழைத்ததைவிட இவர்களின் ஸ்டைலுக்குதான் அதிக மவுசு என்பது கூடுதல் தகவல்).

சத்தி லிங்க்

sathi
‘‘நான் முதல்வர் ஆனாலும் முகநூலில் எனது எழுத்து தொடரும்” என நம்பிக்கையோடு இருப்பவர் சத்தி லிங்க். சொந்த ஊர் மதுரை. (நானும் மதுரைக்காரன்தாண்டா என்கிற டயலாக் அடிக்கடி அவரின் ஸ்டேட்டஸ்களில் பார்க்க முடிகின்றது). பத்தாயிரத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸோடு, ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளோடு தனக்கென ஒரு தனி ட்ராக்கில் பயணிக்கும் சத்தி லிங்க், டி.ராஜேந்தரின் தீவிர ரசிகர் என்பது அவரின் கவர் போட்டோவிலேயே தெரிகிறது.
(ப்ப்பா..! என்னா ஒரு தன்னடக்கம்)

‘‘எடுத்தோம் கவிழ்த்தோம்னு இருக்கனும்! அப்பதான் இட்லிசட்டில ஆவியடிக்காது” என்பது போன்ற அறிவார்ந்த ஸ்டேட்டஸ்களால் இன்னும் ‘‘பேஸ்புக் எண்டெர்டெயினர்” அவார்டை தன் வசப்படுத்தியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்தவுடன் ஒவ்வொருவரும் வித்தியாசமாய் பதிவிட இவரோ, சிவாஜிக்குத்தான் ஏற்கனவே மணிமண்டபம் கட்டியாச்சே!!! எம்ஜிஆர் கூட மொட்டதலையோட ஹெலிகாப்டர்ல வந்து தொறந்துவச்சாரே என ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தை நமக்கே நினைவுபடுத்தினார். இவரைப்பற்றி சில சுவாரசியமான விஷயங்களும் உண்டு.

ஆணியடி பதிவர்!

10353548_450182531796894_3188977390047757110_n

ஏழு மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்பதற்காக கராத்தே வீரர் ஹுசைனி தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டார். அவருக்கே சவால் விடும் வகையில் உச்சந்தலையில் ஆணி அடிப்பது போன்று இவர் பதிவிட்ட படம் வைரலாகியது. அன்றிலிருந்து இவர் ‘‘ஆணியடி பதிவு டோலர்” என்றே அழைக்கப்படுகிறார்.

சத்தி லிங்கின் சில ஆணியடி பதிவுகள்!

ரிட்டையர்டு ரவுடி

rtd

ரவுடில என்னங்க ரிட்டையர்டு? இதே கேள்விதான் நமக்கும். இருந்தாலும் ரிட்டையர்டு ரவுடின்னு சொன்னாதான் எல்லோருக்கும் தெரியுது. ரொம்ப சிம்பிள். சிவாஜி மணிமண்டபம் விஷயத்தில் ‘‘நம்பியாரும்தான் நல்லா நடிச்சாரு அவருக்கு ஏன் மணிமண்டபம் கட்டலைன்னு கேட்ட உலகின் முதல் மனிதர் இவர்தான்”. (உமக்கே ஓவரா தெரியலயா பாஸ்). எதிலும் நேர்மையை விரும்புவாராம் இவர். அதனாலேயே நண்பர்களால், எங்கள் அண்ணன் ரிட்டையர்டு ரவுடி, டிவிக்கு எதிரே பெரிய நிலைக்கண்ணாடிய செட் செய்து அதில்தான் படம் பார்ப்பார்; ஆனால் திருட்டு விசிடியில்! என கலாய்க்கப்படுகிறார். என்னதான் இவரைக் கலாய்ச்சாலும் அண்ணாச்சி என்றால் அன்போடு ஓடி வந்துவிடுகிறார்.

ஆனால் இவரையே கொஞ்சம் டென்ஷனாக்கியவர்கள் பட்டியலில் ஒரு சிலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் சத்தி லிங்க். சத்தி லிங்கின் அக்கவுண்டை தயவு செஞ்சு ப்ளாக் பண்ணுங்க என்று ஃபேஸ்புக் ஓனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு இவர் எழுதிய மரியாதை நிமித்தமான கடிதம் அவரையே கொஞ்சம் டென்ஷன் அடைய வச்சிடுச்சாம்.

10393808_517808678367612_1633511420049832922_n

‘‘சேட்டை புடிச்ச பையன் சார்” என மாரி படத்தில் வரும் டயலாக் இவருக்கு முற்றிலும் பொருந்தும். எங்களுக்கு தெரிந்து ஃபேஸ்புக் பிரபலம்னா அது எங்கள் அண்ணன் ரிட்டையர்டு ரவுடிதான்னு கட் அவுட் வெச்சாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ரவுடின்னு பேரு வச்சிருந்தாலும் அன்போடு பழகக்கூடியவர். தனக்கென தனித்த ஃபாலோவர்ஸை வைத்துக்கொண்டு நகைச்சுவைப் பதிவுகளைப் பதிவிடுவதில் வல்லவர் ரிட்டையர்டு ரவுடி.

ரிட்டையர்டு ரவுடுயின் கலாய் பதிவுகள்

வாழ்த்துங்க ப்ரெண்ட்ச்ச்ச்!!!

முகநூலில் டிரெண்ட் அடித்த வசனங்களில் இதுவும் ஒன்று. இவர்கள் வாழ்த்தச் சொல்லுபவர்களை நாம் மறுபிறவி எடுத்து வந்தாலும் பார்க்க முடியாது. அப்படிப்பட்டவர்களின் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துங்க ப்ரெண்ட்ச்ச்ச் என்பது வழக்கமாகி விட்டது. இருந்தாலும் எதற்கும் சளைக்காமல் மனமார வாழ்த்துபவர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பது நம்ம பயலுகதான்.

நீங்களும் வாழ்த்திடுங்க ப்ரெண்ட்ச்ச்ச்!

பூபதி கலைவாணன்

boobi copy

‘எனக்கு வாய் வேற சும்மா இருக்க மாட்டேங்குது கொஞ்ச நாள் கழிச்சு வரேன்’னு சொன்னவரை ‘‘இப்போது’’ புடிச்சிட்டோம். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழகமே லயோலா கல்லூரியின் அரசியல் கருத்துக்கணிப்பில் தீவிரமாய் இருந்தபோது அதில் நடிகர் விஜய் பெயர் இல்லாதது` பற்றிக் கவலைப்பட்டவர்களில் இவரும் ஒருவர். தீவிர அஜித் ரசிகரான இவரின் டைம்லைன் முழுக்க நடிகர் விஜய்யின் படங்களே அலங்கரிக்கின்றன. இது எந்த வகையான டிசைன் என்றே தெரியவில்லை. (புலி,பாவம் பாஸு)

பூபதி கலைவாணனின் பதிவுகள்

கந்தா தங்கராஜ்(இலக்கியவாதி)

kandha

என்னது இலக்கியவாதியா? எத்தனை புக் எழுதியிருக்காருன்னு நாங்களும் தேடிப் பார்த்தோம் ஒண்ணுகூட சிக்கலை. ஃபேஸ்புக் டீக் கடையில் வேலை பார்ப்பதாக பதிவிட்டிருக்கிறார். நமக்கு அடுத்தவர் முக்கியத்துவம் தரலைனு யோசிக்கும் முன்பு நாம் அவர்களுக்கு அந்த முக்கியத்துவத்தைக் கொடுத்தோமா என யோசித்தால் பல பிரச்சனைகளைத் தவி்ர்க்கலாம் என தத்துவங்கள் பேசி லைக்குகளைக் குவிக்கும் இவரின் கலாய் ஸ்டேட்டஸ்கள் என்றைக்கும் ரசிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. ஜீன்ஸை துவைக்கவில்லை என்று எந்த ஆணையும் திட்டாதீர்கள் தண்ணீர் சிக்கனத்தின் அவசியம் அறிந்தவன் அவன் என ஆண்களின் குரலாய் அவ்வப்போது அட்வைஸ் கொடுக்கும் கந்தா தங்கராஜின் பதிவுகள் சில.

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி ஒருவர் விடாமல் எல்லோரையும் கலாய்க்கும் இவர்களின் பதிவுகளில் எதார்த்தம் நிறைந்த நகைச்சுவை ஸ்டேட்டஸ்கள் லைக்ஸ் அள்ளுகிறது. நீங்க எல்லோரும் ஒலக சினிமாவுக்கு டயலாக் எழுதப் போனா நிச்சயம் எதிர்காலம் பிரகாசமா இருக்கும் டோலர்களே..!!

(கடைசியில நம்மளையே அவுங்க ஸ்டைல்ல எழுத வச்சிட்டாங்களே தோழர்!!!)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்