ஃபேஸ்புக் வலைதளத்தில் இருந்து பயங்கரவாதத்தை பரப்பும் சுமார் 1.4 கோடி பதிவுகள் நீக்கப்பட்டப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் தளத்தில் பயங்கரவாதத்தை பரப்பும் நோக்கம் கொண்ட சுமார் 1.4 கோடி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட பதிவுகளில் ஐ.எஸ்., அல் கொய்தா அமைப்புகளுக்கு தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் மட்டும் ஃபேஸ்புக் சுமார் 94 லட்சம் பயங்கரவாதம் சார்ந்த தரவுகளை நீக்கியிருக்கிறது. இதில் பெரும்பாலானவை விசேஷ வழிமுறைகள் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டவை ஆகும். மூன்றாம் காலாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை சுமார் 30 லட்சம் பழைய பயங்கரவாதம் சார்ந்த தரவுகள் நீக்கப்பட்டுள்ளன.

இரண்டு மற்றும் மூன்றாவது காலாண்டில் மட்டும் ஐ.எஸ். மற்றும் அல் கொய்தா தரவுகள், ஃபேஸ்புக் பயனர்கள் கண்டறியப்படும் முன்னரே 99 சதவிகித தகவல்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மோனிகா பிகெர்ட் வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

2018ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது அதற்கடுத்த இரண்டு காலாண்டுகளில் அதிகளவு பயங்கரவாதம் சார்ந்த தரவுகள் நீக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் தளத்தில் ஐ.எஸ். மற்றும் அல் கொய்தா சார்ந்த பதிவுகளை கண்டறிய மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

ஃபேஸ்புக் பதிவுகளில் அதிகளவு பயங்கரவாதம் சார்ந்த குறிப்புகள் இடம்பெற்று இருக்கும் நிலையில் மெஷின் லெர்னிங் கண்டறியும் பதிவுகள் தானாக நீக்கப்படும். இதுபோன்ற பதிவுகளை பயனர்கள் கண்டறியும் நேரத்தை மெஷின் லெர்னிங் பயன்பாடு குறைத்து இருக்கிறது.

courtesy: maalaimalar

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்