மக்களவைத் தேர்தல் பிரசாரங்களுக்காக சமூக வலைதளமான ஃபேஸ்புக் அரசியல் கட்சிகள் இதுவரை சுமார் ரூ.8 கோடி செலவிட்டு விளம்பரம் செய்துள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதிக பட்சமாக பாஜக அதிக அளவில் விளம்பரம் செய்துள்ளது. 

ஃபேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு அளித்துள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகள்
ஃபேஸ்புக்கில் மொத்தமாக ரூ.6.88 கோடி செலவில் 34,048 விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. அதுவே, மார்ச் 23 ஆம் தேதிக்குள்ளாக 41,514 விளம்பரங்களாக அதிகரித்துள்ளது.  அவற்றுக்கு செய்யப்பட்ட செலவும் ரூ.8.38 கோடியாக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக, பாரத் கே மன் கீ பாத் என்ற
ஃபேஸ்புக் பக்கத்தில் ரூ.2.23 கோடிக்கும் அதிகமாக சுமார் 3,700 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாஜக ஃபேஸ்புக் பக்கத்தில் ரூ.7 லட்சம் செலவில் சுமார் 600 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மை ஃபர்ஸ்ட் வோட் ஃபார் மோடி, நேஷன் வித் நமோ போன்ற ஃபேஸ்புக் பக்கங்களிலும் விளம்பரங்களுக்காக அதிகம் செலவிடப்பட்டுள்ளன. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின்
ஃபேஸ்புக் பக்கத்தில் ரூ.2.12 லட்சம் செலவில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பிப்ரவரி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.5.91 லட்சம் செலவில் 410 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here