ஃபேஷன் பர்தா: 5 சிறந்த பர்தா வடிவமைப்பாளர்கள்

0
2891

”பர்தால என்னப்பா ஃபேஷன் என்கிறீர்களா?”, கருப்பு நிற பர்தாக்களை மட்டும் அணிந்து போரடித்துவிட்டதா? மற்றவர்களின் கட்டாயத்துக்காக பிடிக்காமல் பர்தா அணிகிறீர்களா? இனிமேல் யாரும் கட்டாயப்படுத்தாமலே பர்தா அணிவீர்கள். ஸ்டைலான, செம்ம ஃபேஷனான பர்தாக்களை வடிவமைக்கும் சில பெண்களையும் சமூக வலைதளங்களில் அவர்களுக்கான தனி ரசிகைகள் பட்டாளத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் வாருங்கள்.
1. ஏசியா ஏ.கே.எஃப்:

இவங்க ஒரு குவைத்-அமெரிக்க பெண். ‘டர்பன்’ ஸ்டைலில் பர்தா அணிவது இவருக்கு அசால்ட். ஸ்டைலான ஆடைகளில் விதமான பர்தா அணிவது ஏசியாவுக்கு கைவந்த கலை. இவருடைய வலைப்பூவில் உள்ள பர்தா டிசைன்களைப் பார்த்தால் உடனடியாக நமக்கும் பர்தா அணிய வேண்டும் என்ற ஆசை நிச்சயம் வரும். இவரை இன்ஸ்டக்ராம் வலைதளத்தில் 1.5 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பர்தாவுக்கு ஏற்ற நெக்லஸ், லிப்ஸ்டிக், கூலிங்கிளாஸ், ஷூ ஆகியவற்றை எப்படி தேர்வு செய்வது என்பதையும் இவரிடம் கற்றுக்கொள்ளலாம்.

2. டீனா டோர்கியா:

லண்டனில் உள்ள மிகச்சிறந்த பர்தா வடிவமைப்பாளர் என்றால் டீனா டோர்கியாதான். இவர் பாதி அமெரிக்கன், பாதி எகிப்து பெண். டீனா டோக்கியோ என்ற பெயரில் இவருக்கு வலைப்பூ உண்டு. பிபிசி ,’முஸ்லில் மிஸ் வார்ல்ட்’ என்ற பெயரில் மூன்று முறை ஆவணப்படம் எடுத்துள்ளது. அதில் அவர் கர்ப்பமாக இருக்கும் போது அணிந்த பர்தாக்களும் உடைகளும் ரொம்ப ஃபேமஸ். எப்படி ‘கிமோனோ கஃப்தான்ஸ்’ (Kimono Kaftans) என்ற வகை உடையை நாமே தயாரிப்பது எனவும் அவர் எழுதியுள்ளார். இவரும் இவருடைய பர்தாக்களும் கொள்ளை அழகு!

3. நூரியா ஓ மார்ட்டினெஸ்:

இவர் ஹிஜாபால் (Hijabhaul) என்ற பெயரில் சமூக வலைதளங்களில் உள்ளார். உடைகளுக்கு ஏற்ற வகையில் பர்தா வடிவமைப்பது, உடைக்கு ஏற்ற நிறத்தை தேர்ந்தெடுப்பது ஆகியவை இவருடைய ஸ்பெஷல். பர்தாவுடன் சில கல் வேலைப்பாடுகள் செய்து ஒரு பிரம்மாண்ட லுக் கொடுப்பார் நூரியா ஓ மார்ட்டினெஸ். இவர் பர்தாவை தலையை சுற்றி அணிந்து கூந்தல் போல் தொங்கவிட்டிருப்பது மிகவும் லுக்கான ஒன்று.

4.லூலு எல்ஹாஸ்பு:

இவர் இந்தோனேஷியாவில் எப்படி புகழ்பெற்ற பர்தா வடிவமைப்பாளர் ஆவது என பல தகவல் நிறைந்த லூலுஎல்ஹாஸ்பு எனும் வலைதளத்தை முதன்முதலில் ஆரம்பித்தார். லூலு எல்ஹாஸ்புவின் கல்யாணத்தில் அவர் அணிந்த பர்தா பார்ப்பவர்களை எளிதில் கவரக்கூடியது. ஆடம்பரமாக இல்லாமல், எளிமையான ஆனால், அதே நேரத்தில் கண்ணைக் கவரக்கூடிய பர்தாக்களை லூலு நன்றாக வடிவமைப்பார்.

5. இக்லாஸ் ஹுசைன்:

’த முஸ்லிம் கேர்ள்’ என்ற வலைதளத்தில் இணையம் வழியாகவே எப்படி பர்தாக்கள் வடிவமைப்பது என இ்லவச வகுப்புகள் கூட நடக்கின்றன. டொரண்டோவை சேர்ந்த இக்லாஸ் ஹுசைன்தான் ‘த முஸ்லிம் கேர்ள்’ வலைதளத்தை நிறுவியவர். கவிஞர், எழுத்தாளரும் கூட. ’ஃபெய்த், ஃபேஷன், லவ்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில் முஸ்லிம் பெண்ணாக இருத்தலின் வலியையும் அதே சமயத்தில் ஒருவித சுகத்தையும் பற்றி எழுதியிருப்பார்.

இது சமூகவலைதளங்களின் யுகம். இன்ஸ்டக்ராம், ஃபேஸ்புக், ட்விட்டர், ஈ-மெயில் என அனைத்திலும் இவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நிறைய பேர் அவர்களுடைய முழுபெயரை கூட எழுதவில்லை. துணைபெயரில்தான் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் ’பர்தா’ பற்றிய பொதுவான கருத்துக்களை திணிக்கின்றனர். அதாவது, பர்தா பெண்களின் சுதந்திரத்தை குறைக்கிறது என்று. ஆனால், பெண்களே அதை விரும்பி அணிந்தால் அது தவறே இல்லை.

இனி அழகழகான, கலர்ஃபுல்லான, ஸ்டைலான பர்தாக்களை அணிந்து மகிழுங்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்