நடிகை சமந்தா தெலுங்கில் நடித்து வெளியான ‘ஓ பேபி’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஹீரோயினை முன்னிலைப் படுத்தும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தா. இதற்கு முன்பு வெளிவந்த்ச் ‘யூ டர்ன்’ படமும்,  சமீபத்தில் வெளியான ‘ஓ பேபி’ படமும் சமந்தாவை முன்னிலைப் படுத்தி இயக்கப்பட்ட படங்கள் தான்.

இந்நிலையில் சமந்தாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. பர்கவுர் ஆக்டிவிட்டீஸ்(ParkourAct)என சொல்லக் கூடிய, அதிக உயரம் தாண்டுதல் தான் அது. 32 வயதாகும் சமந்தா இந்த பர்கவுர் ஆக்டிவிட்டீஸை சர்வ சாதாரணமாக செய்திருப்பதைப் பார்த்து மூக்கின் மீது விரல் வைக்கிறார்கள் ரசிகர்கள்.