ஆம் ஆண்டின் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது.
நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து,உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

குரோசியா அணி கேப்டன் லூகா மோட்ரிச்சுக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது. இதேபோல், உலக கோப்பையில் 6 போட்டிகளில் 6 கோல்கள் அடித்த தங்க காலணி விருது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேனுக்கு வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது பெல்ஜியம் அணியின் கோல் கீப்பர் தியாபட் கோர்டாய்க்கு வழங்கப்பட்டது.

இந்த உலக கோப்பையின் இளம் வீரருக்கான விருதை பிரான்ஸ் அணியின் எம்பாப்வே பெற்றார்.

இதே போல் ஃபிஃபா ஃபேர் பிளே(Fair Play) ட்ராஃபியை ஸ்பெயின் அணியினர் பெற்றனர்.

https://twitter.com/FIFAWorldCup/status/1018546521501925377

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்