21 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 8.30 மணிக்கு ஆரம்பித்தது. இதில் பிரான்ஸ் – குரோசியா அணிகள் மோதிக்கொண்டன.

ஆட்டத்தின் முதல் பாதியில் 17-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. குரோசியா வீரர் மேண்ட்சுகிச்சின் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.

ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு கிடைத்த ப்ரீ ஹிக் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு கோல் அடித்தது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது.

38-வது நிமிடத்தில் பிரான்ஸ்க்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது.பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் இரு அணி வீரர்களும் 45 நிமிடம் வரை கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினார்கள்.

இந்நிலையில் 59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றது.

பின்னர் 69-வது நிமிடத்தில் குரோசியா வீரர் மாண்ட்சுகிச் இரண்டாவது கோல் அடித்தார். அப்போது இரு அணிகளும் 4-2 என்ற கோல் கணக்கில் இருந்தன.

அதன்பின் எவ்வளவு போராடியும் குரோசியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 4-2 என குரோசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

DiKrRR0XkAAn9Qu

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்