உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் அணி உலகக்கோப்பை பட்டத்தை வென்றுள்ளது.1998-இல் பிரான்ஸில் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து நடைபெற்ற போது உலகக்கோப்பையை வென்றது.

உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரான்ஸ், குரோஷியா அணிகள் விளையாடின.

போட்டியின் 19-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் மரியோ மாண்ட்ஸூகிக் பிரான்ஸ் அணிக்காக கோல் அடித்தார். பந்தை தலையில் தடுக்க முயல, அறியாமல் அது பிரான்ஸ் அணியின் கோலாக மாறியது. இதனால், பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

பின்னர், அடுத்த 10-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெரிசிக் ஒரு கோல் அடித்தார் .

அதன்பிறகு, பிரான்ஸ் அணிக்கு 36-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பிரான்ஸ் வீரர் கீர்ஸ்மேன் கோல் அடித்து அந்த அணியை 2-1 என முன்னிலைப் பெறச் செய்தார்.

முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இருந்தது .

2-ஆவது பாதி ஆட்டத்தில் விறுவிறுப்புடன் தொடங்கியது. 60-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா கோல் அடிக்க அந்த அணி 3-1 என முன்னிலை பெற்றது.

27

65-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் பாபி மீண்டும் ஒரு கோல் அடித்து 4-1 என முன்னிலை பெற்றது.

69-ஆவது நிமிடத்தில் குரோசியா வீரர் மரியோ மாண்ட்ஸூகிக் கோல் அடித்தார். இதனால் குரோஷிய அணி 2-4 என்ற நிலை அடைந்தது.

இதன்மூலம், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி 38 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாக பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here