2018 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா,கோஸ்டாரிகா அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் மெக்சிகோ,ஜெர்மனி அணியையும் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

இப்போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிலிப்பே கவுடின்ஹோ கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்து அணியினர் எவ்வளவு முயன்றும் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஸ்டீவன் ஜூபர் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் இரு அணியினரும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். ஆனால் இறுதிவரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

Df6wTSuX0AIn064

Df6xxUTWsAM035c

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here