ரஷ்யாவில் நடந்துவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து அர்ஜென்டினா அணி இரண்டாம் சுற்றில் வெளியேறியது.

ரஷ்யாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

24

இன்று நாக்-அவுட் ஆட்டங்கள் தொடங்கின. இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் மற்றும் ’டி’ பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோதின.

21

கிலியன் டபாப்பே சிறப்பாக விளையாடி, 2 கோல்கள் அடித்து பிரான்ஸின் வெற்றிக்கு உதவியுள்ளார்.

பிரான்ஸ் அணி அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

Block title