2018 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் E பிரிவில் இடம் பிடித்துள்ள செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டம் ஆரம்பித்த 5-வது நிமிடத்தில் செர்பிய அணியின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செர்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். அந்த அணியின் கிரானிட் சாகா 52-வது நிமிடத்தில் ஒரு கோலையும் ஆட்டம் முடியும் பரபரப்பான கடைசி நிமிடங்களில் சுவிட்சர்லாந்து அணியின் செர்டான் ஷாகிரி ஒரு கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட கூடுதல் 6 நிமிடங்களில் செர்பிய கோல் அடிக்க முடியாமல் போக இறுதியில், செர்பிய அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

DgUhEk3XcAATf68

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here