2018 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் D பிரிவில் இடம் பிடித்துள்ள நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து நைஜீரியா அணி வீரர்களும் ஐஸ்லாந்து அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நைஜீரியா அணியின் அகமது மூசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

தொடர்ந்து, ஆட்டத்தின் 75-வது நிமிடத்திலும் அகமது மூசா மற்றொரு கோல் அடித்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது .
இறுதியில், நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

DgT6KN_WkAQ-wIa

DgTp6tMWkAEijOQ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here