2018 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதலாவது போட்டியில் E பிரிவில் இடம் பிடித்துள்ள பிரேசில் மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் மோதிக் கொண்டன.

பிரேசில் அணி முதல் ஆட்டத்தை டிரா செய்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையுடன் மோதலுக்குத் தயாராகிக் களம் இறங்கியது.

ஆரம்பம் முதலே பிரேசில் அணியின் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ ஆகிய மூவருரின் கோல் அடிக்கும் முயற்சி 90 நிமிடங்கள் வரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை. கோஸ்டா ரிகா கோல்கீப்பர் நவாஸு சிறந்த முறையில் தன்னை நோக்கி வந்த பந்துகளை தடுத்து பிரேசில் அணியின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார். இதனால் பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

90 நிமிடம் முடிந்தபிறகு காயம், ஆட்டம் நேரம் நிறுத்தத்தை கணக்கில் கொண்டு 7 நிமிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக பிரேசில் அணியின் பிலிப்பே கவுட்டினோ முதல் நிமிடத்திலேயே பந்தை கோல் நோக்கி அடித்தார். இதனால் கோஸ்டா ரிகா 1-0 என முன்னிலைப் பெற்றது.

ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கடைசி நொடியில் நெய்மர் கோல் அடிக்க பிரேசில் 2-0 என வெற்றி பெற்றது.

DgTO1tZW0AAgDvl

DgTR04LXUAM6LJ7

இதையும் படியுங்கள்